பொதுக்காலம் 21-ம் ஞாயிறு
ஆண்டவர் கூறியது: மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான்
அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க
வரு வேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர்
அடை யாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை
மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர்
வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச்
செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என்
மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு
எடுத்துரைப்பார்கள். அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவ ரையும் அனைத்து
மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலா கக் கொண்டு
சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின்
கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களை குதிரைகள், தேர்கள்,
பல் லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள
என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள்
சிலரை குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12:5-7,11-13
சகோதர சகோதரிகளே, தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும்
அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: "பிள்ளாய், ஆண்டவர் உன் னைக்
கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும் போது
தளர்ந்துபோகாதே.
தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்ட வர் தாம் யாரிடம்
அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.'' திருத்தப்படு வதற்காகத்
துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள்.
கடவுள் உங்களைத் தம் பிள்ளைக ளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத
பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப் படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய்
இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும்.
ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான
வாழ் வையும் பயனாகப் பெறுவர். எனவே, "தளர்ந்துபோன கைகளைத்
திடப்படுத்துங்கள், தள் ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள்
நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.'' அப்போதுதான் ஊனமாய்ப் போன
கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 13:22-30
சிந்தனை: வத்திக்கான் வானொலி