Thursday, August 8, 2013

ஆகஸ்ட் 11, 2013

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். தலைவர் வந்து பார்க்கும்போது, விழித்திருக்கும் பொறுப்புள்ள பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்ட வரின் வருகையை எப்போதும் எதிர்நோக்கி காத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் வர காலம் தாழ்த்துவார் என கூறிக்கொண்டு, தீய நாட்டங்களுக்கும், செயல் களுக்கும் இடம் கொடுத்தால் நாம் கொடுமையான தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவோம் என இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். நம் தலைவராகிய இயேசுவுக்கு உண்மை உள்ள வர்களாக வாழும்போது, நம்மை அவர் தம் உடமைக்கெல்லாம் அதிகாரியாக அமர்த்து வார் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. எனவே கடவுளின் திருவுளத்தை உணர்ந்து, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்புள்ள பணியாளர்களாக செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்கப்பட்ட நிகழ்வை எடுத்துரைக்கிறது. பாஸ்கா இரவில் எகிப்தியர்களின் தலைப் பிள்ளைகளைக் கொன்று, ஆண்டவர் விடுதலை அளித்ததை நினைத்து இஸ்ரேல் மக்கள் மகிழ்ந்ததை இவ்வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது. எகிப்தியர் செங்கடலில் ஆழ்த்தப்பட்டதால், இஸ்ரயேல் மக் கள் மேன்மை அடைந்ததை உணர அழைக்கப்படுகிறோம். கடவுளின் வாக்குறுதியில் நம் பிக்கை கொண்டிருந்ததால் இஸ்ரயேல் மக்கள் மீட்கப்பட்டது போன்று, நாமும் விசுவா சத்தில் உறுதியாக இருந்து மீட்பைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், ஆபிரகாம் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட நல்வாழ்வைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் வார்த் தையை நம்பியதால், அன்னியராய் இருந்தும் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கி வாழ்ந்தார். கருவுற இயலாத சாராவின் மூலம் அவர் வாக்களிக்கப்பட்ட மகனாகிய ஈசாக்கின் தந்தையானதும் நம்பிக்கையால்தான். நம்பிக்கையோடு ஈசாக்கைப் பலியிடத் துணிந்ததால், இறைமகன் இயேசுவின் மூதாதை ஆகும் பேறுபெற்றார். ஆபிரகாமைப் போன்று, நாமும் நம்பிக்கைக்குரியவர்களாய் வாழ்ந்து கிறிஸ்து வாக்களித்துள்ள விண் ணக நாட்டை உரிமையாக்கிட வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் தலைவரே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உண்மை யுள்ள பணியாளர்களாய் வாழவும், திருச்சபையின் மக்கள் உமது திருவுளப்படி வழிநடத்த வும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் வாழ்வே இறைவா,
  
உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் பணத்துக்கும், பதவிக்கும் சேவை செய்வதை விடுத்து, எங்களுக்கு வாழ்வளிக்கும் உண்மை தலைவரான உமக்கே பணி செய்து வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் நிறைவே இறைவா,
   உண்மையின் நிறைவான உம்மை அறிந்துகொள்ளாமல், மூடநம்பிக்கைகளில் மூழ்கித் திழைக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகன் வழியாக நீர் அளித்த மீட்பைத் தேடி அடைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் உறவே இறைவா,
   தவறான புரிதல்களாலும், விட்டுக்கொடுக்கும் மனம் இல்லாததாலும் ஒருவரையொரு வர் பகைத்து வாழ்பவர்கள், மீண்டும் தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொண்டு புதுவாழ்வு வாழ துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் மீட்பரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நம்பிக்கைக் குரியவர்களாய் வாழ்ந்து
, விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும், விண்ணகத்தை உரிமை யாக்கிக்கொள்ளவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.