பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து
அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு
முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான் களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின்
அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை
நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப்
பெருமைப்படுத்தினீர்.
நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும்
இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார் கள் என்னும் இறைச் சட்டத்திற்கு
அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர் களின் புகழ்ப்பாக்களை அதே
வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 11:1-2,8-19
சகோதர சகோதரிகளே, நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி;
கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கை யால்தான் நம்
மூதாதையர் நற்சான்று பெற்றனர். ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த
இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால் தான். தாம் எங்கே போகவேண்டும் என்று
தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில்
அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கை யினாலேயே.
அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோ புடனும் அவர்
கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை
எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர்
ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில்
வாக்க ளித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார்.
இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான
விண்மீன்களைப் போலவும் கடற்கரை யிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற
மக்கள் பிறந்தனர். இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்;
வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு
மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக்
குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார் கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய
தாய் நாட்டைத் தேடிச்செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை
அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச்
செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான
ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகி றார்கள். அதனால்தான் கடவுளும்
தம்மை, "அவர்களுடைய கடவுள்'' என்று அழைத்துக் கொள்ள வெட்கப்படவில்லை.
அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள் ளார்.
ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது
நம்பிக்கையி னால்தான். "ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்'' என்ற
வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட
முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை
அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார்.
பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.
நற்செய்தி வாசகம்: லூக்கா 12:32-48
சிந்தனை: வத்திக்கான் வானொலி