பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, "இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக
வேண் டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர்
வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள்
இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை'' என்றார்கள்.
அதற்கு அரசன் செதேக் கியா, "நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில்
உங்களைப் பகைத்துக் கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே'' என்றான்.
எனவே அவர்கள் எரேமியா வைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன்
மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்கிணற் றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே
இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது.
எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கி னார். எபேது மெலேக்கு
அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, "என் தலைவரே! என் அரசரே!
இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம்
செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெ னில் நகரில்
அப்பம் ஏதும் கிடையாது'' என்று கூறினார்.
அதைக் கேட்ட அரசன் எத்தி யோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, "உன்னோடு
மூன்று பேரை இங்கிருந்து கூட் டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு
முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கி விடு'' என்று கட்டளையிட்டான்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12:1-4
சகோதர சகோதரிகளே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச்
சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப்
பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன
உறுதியோடு ஓடுவோ மாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு
செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம்.
அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல்
சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில்
வீற்றிருக்கிறார்.
பாவிகளால் தமக்கு உண் டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட
அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக
மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு
நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
நற்செய்தி வாசகம்: லூக்கா 12:49-53
சிந்தனை: வத்திக்கான் வானொலி