Thursday, August 1, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். உலக செல்வங்களில் பற்று வைக்காமல் கடவுளுக்கு விருப்பமான வழி யில் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவர் ஒவ்வொரு வரும் உலகிற்குரிய அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்ற அழைக்கப்படு கிறார். நாம் கோடிகோடியாய் சொத்து சேர்த்தாலும், அதை இந்த உலகத்திலேயே விட்டுச் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். நமது உயிர் பிரிந்த பிறகு, நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் யாருக்கு உரிமையாகும் என சிந்திக்க இயேசு நம்மை அழைக்கிறார். உலகப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டாமல், விண்ணக வாழ்வுக்கு உரிய வற்றை சேர்த்துவைக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், மனிதரின் உழைப்பு அனைத்தும் வீண் என்பதை உணர்ந்து வாழ அழைப்பு விடுக்கிறது. அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் கடினமாக உழைத்து சேர்த்த சொத்து, அதற்காக சிறிதும் உழைக்காதவரிடம் செல்கின்ற யதார்த்த நிலையை எடுத்துரைக்கிறது. உலகப் பொருட்களுக்காக ஒருவர் செய்யும் அனைத்து முயற்சிகளும், அவரது செயல் திட்டங்களும் அவருக்கு பயன் அளிக்காததை நாம் பல நேரங்களில் காண்கிறோம். அமைதி இல்லாத இவ்வுலகில், கடவுளின் திருவடிகளில் நிம் மதி தேடுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்கு பெற விரும்பினால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுமாறு அழைப்பு விடுக்கிறார். கிறிஸ் துவே நமக்கு வாழ்வு அளிப்பவராக இருப்பதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகி றோம். உலக இயல்புக்குரிய ஒழுக்கக்கேடுகள் அனைத்தில் இருந்தும் விலகி, புதிய மனித இயல்பை அணிந்துகொள்ள திருத்தூதர் நம்மை அழைக்கிறார். கிறிஸ்து இயேசு வையே அனைத்துமாகக் கொண்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத புதிய சமூகம் படைக்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விண்ணகத் தந்தையே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், விண்ணக வாழ் வுக்கு உரியவர்களாய் வாழவும், திருச்சபையின் மக்கள் அனைவரையும் விண்ணக வாழ் வுக்கு தயார் செய்யவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வு தருபவரே இறைவா,
   பதவிக்காகவும்,
புகழுக்காகவும், சொத்துகளுக்காகவும் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் தன்னலவாதிகள் அனைவரையும் மனந்திருப்பி, உலகெங்கும் வாழும் மக்கள் அமைதி யான வாழ்வை சுவைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதி அருள்பவரே இறைவா,
   உலகு சார்ந்த பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து நீர் தரும் அமை தியை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மீட்பு அளிப்பவரே இறைவா,
   உலகப் பொருட்கள் மீதான ஆசையால் உறவுகள், உடல்நலம் மற்றும் மன அமைதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், விண்ணுலகு சார்ந்தவற்றில் மனதை செலுத்தி உமது மீட்பை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. மகிழ்ச்சி கொடுப்பவரே இறைவா,
   உலகப் பற்றுகளில் இருந்து விலகி, விண்ணக வாழ்வை ஆர்வமாக தேடும் உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும்
வழங்கி, உம்மில் மகிழ்ச்சி காணும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.