Thursday, August 15, 2013

ஆகஸ்ட் 18, 2013

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பிரிக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவருக்கு உரியவர்களாக தனித்துவத்துடன் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் இந்த உலகிற்கு உரியவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, விண்ணக வாழ்வுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை முழு மையாக உணர அழைக்கப்படுகிறோம். கடவுளின் விருப்பப்படி, இவ்வுலகின் தீமைகளில் இருந்து விலகி வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவரைப் பின்தொடரவே நாம் கிறிஸ்தவ வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் தலைவராகிய இயேசு இவ்வுலகில் மூட்ட வந்த தீயைப் பற்றியெரியச் செய்பவர் களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பிரிக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எரேமியா கடவுளுக்காக துன்பங்களை ஏற் றுக்கொண்டதைப் பற்றி எடுத்துரைக்கிறது. யூதா நாட்டு மக்கள், வாள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றால் மடியப்போவதாக எரேமியா இறைவாக்கு உரைக்கிறார். மக்களை மனம் தளரச்செய்து வருவதாக எழும் குற்றச்சாட்டால், எரேமியா பாழும் கிணற்றில் தள் ளப்படுகிறார். நகரில் பஞ்சம் உண்டாகவே, இறை அருளால் எரேமியா மீட்கப்படுவதைக் காண்கிறோம். துன்பங்களின் நடுவிலும் ஆண்டவருக்கு உண்மை உள்ளவர்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பிரிக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், பாவங்களை உதறிவிட்டு நிலைவாழ்வை நோக்கி மன உறுதியோடு ஓட நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்காக சிலுவை மரணத்தின் கொடிய வேதனையையும், இழிவையும் தாங்கிக்கொண்ட ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் மனம் தளர்ந்து போகாத வாறு, இறைத்தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்துவின் மாட்சியை நினைவில் கொள்வோம். விண்ணகத்தை நோக்கிய ஓட்டத்தை நம்பிக்கையுடன் நிறைவு செய்ய வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிறைவு அளிப்பவரே இறைவா,
   உமது பணிக்காக நீர் தேர்ந்தெடுத்துள்ள
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவ றத்தார் அனைவரும், நிறைவாழ்வை நோக்கிய பயணத்தில் ம் மக்களை மன உறுதி யுடன் வழிநடத்த தேவையான அருளைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கை தருபவரே இறைவா,
  
உலகில் போர் பதற்றம், வன்முறை, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனை களால் நம்பிக்கை இழந்து தவிக்கும் இளையோர், உம் திருமகன் இயேசு வழியாக நம் பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவரே இறைவா,
   இரண்டாயிரம் ஆண்டு காலமாக உமது மீட்பின் மறைபொருளை அறியாமலும், ஏற்றுக் கொள்ளாலும் வாழும் எம் நாட்டு மக்கள் உம்மை அறிந்து, ஏற்றுகொள்ளவும் உமது மீட்பைக் கண்டடையவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வை வழங்குபவரே இறைவா,
   உலகெங்கும் உமது நற்செய்தியைப் புறக்கணிப்பவர்களால், கிறிஸ்தவ மக்களும் மறை போதகர்களும் அனுபவிக்கும் துன்பங்கள் நீங்கிட, மீட்பின் மறைபொருளை உலகோர் அனைவரும் புரிந்துகொள்ளச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. வரம் அருள்பவரே இறைவா,
  
நிலைவாழ்வை நோக்கி மன உறுதியோடு ஓடத் தேவையான நம்பிக்கையை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் அளித்து, உமக்கு உரிய வர்களாக எங்களை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.