Wednesday, August 29, 2012

செப்டம்பர் 2, 2012

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு தேவையற்ற மனித மரபு களில் இருந்து விலகி கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூயவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனித உள்ளத்தின் விளைவுகளாகிய கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல்களில் இருந்து விலகி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கு தந்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளைப் பின்பற்றி வாழுமாறு ஆண்டவர் நம்மைத் தூண்டுகிறார். உடலின் தூய்மையை விட உள்ளத்தின் தூய்மையையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என் பதை இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார். நம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் தூய எண்ணம் கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், ஆண்டவர் அளித்த நியமங்களின்படி நடக்க இஸ்ரயேல் மக்களை மோசே உற்சாகப்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் கட்டளை படி நடப்போர் ஆண்டவர் வாக்களித்த நாட்டை உரிமையாக்கி கொள்வர் என்ற வாக்குறு தியையும் இஸ்ரயேலருக்கு மோசே வழங்குகிறார். கடவுளின் கட்டளைகளே மக்களை அறிவிலும் ஞானத்திலும் சிறந்ததாக மாற்றும் என்ற தெளிவைப் பெற நாமும் அழைக் கப்படுகிறோம். நம் ஆண்டவர் நம்மோடு இருக்குமாறு அவர் தந்த கட்டளைகளை நம் வாழ்வில் கடைபிடித்து தூயவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி சாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நிறைவான வரங்களும், நல்ல கொடைகளும் விண்ணகத் தந்தையாம் கடவுளிடம் இருந்தே வருகின் றன என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், உள்ளத்தில் ஊன்றப்பட்ட இறைவார்த்தைகளுக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூயதும் மாசற்றதுமான வாழ்வு வாழ்ந்து, மீட்படையும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மீட்பின் ஊற்றாம் இறைவா, 
   உம் திருச்சபையை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துற வறத்தார் அனைவரும், உமக்கு உகந்த தூய வாழ்வு வாழவும், மக்கள் அனைவருக்கும் மீட்பின் கருவிகளாகத் திகழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் பிறப்பிடமாம் இறைவா,
  உலகின் பல நாடுகளிலும் நீதியின்றி அடக்கி, ஒடுக்கப்படும் மக்கள் மீது இரக்கம் காட்டி, உமது அன்பையும் அரவணைப்பையும் பெற்றவர்களாய் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற் றில் பங்குபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் உறைவிடமாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்களும் தலைவர்களும் உண்மை கடவுளாகிய உமது அன்பை உண ரவும், உமது கட்டளைகளின்படி வாழ்ந்து இந்த நாட்டை வளப்படுத்தவும் தேவையான அருளுதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வரங்களின் வள்ளலாம் இறைவா,
  
கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல் களின் பிடியில் சிக்கித் தவிப்போர் அனைவரும், உமது அருளால் நன்மைத்தனத்திற்குரிய தூய எண்ணங்களைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. தூய்மையின் நிறைவாம் இறைவா,
   இயேசுவின் கட்டளைகளுக்கு ஏற்ப மனித மரபுகளிலிருந்து விலகி, உம்மையும் பிற ரையும் அன்பு செய்து தூயவர்களாய் வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோ தரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, August 24, 2012

ஆகஸ்ட் 26, 2012

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

முதல் வாசகம்: யோசுவா 24:1-2,15-17,18
   அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதி காரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: "ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார் வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங் களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர் களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.'' மக்கள் மறு மொழியாக, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களி டத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்'' என்றனர்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5:21-32
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவ ருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச் சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத் துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லா மல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம் மீதே அன்பு கொள்கிற வர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். "இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்'' என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்து வுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:60-69
   அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்க ளிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்க ளுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந் திருந்தது. மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன்'' என்றார். அன்றே இயேசு வின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போ வோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவு ளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, August 22, 2012

ஆகஸ்ட் 26, 2012

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தொன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நிலைவாழ்வு தரும் இயேசு வின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, உண்மை கடவுளுக்கு பணிந்து வாழவும், பணிவிடை செய்யவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வாழாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி கடவுளின் மாட்சியை வெளிப்படுத்து பவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், அவரோடு ஒன்றித்த வாழ்வு வாழ்ந்து நிலைவாழ் வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பேதுருவைப் போல ஆண்டவர் இயேசுவின் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்க ளாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கடவுளைப் பற்றி கேள்வி கேட்டதையும், அதற்கு அவர்கள் அளித்த பதிலையும் பற்றி பேசுகிறது. இஸ்ரயேல் மக் கள் உண்மை கடவுளை விடுத்து, வேற்றின தெய்வங்களை வழிபட விரும்புகிறார்களா என்பதற்கு பதிலளிக்குமாறு யோசுவா கேட்கிறார். கடவுளாகிய ஆண்டவரின் மாபெரும் செயல்களை விடுதலைப் பயணத்தில் கண்ட மக்கள், அவரை விடுத்து வேற்று தெய்வங் களை நாடப் போவதில்லை என்று பதிலளிக்கிறார்கள். நாம் வழிபடும் உண்மை கடவு ளிம் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல ஒருவர் மற்றவருக்கு பணிந்து வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து திருச்சபை யின் தலையாய் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், கிறிஸ்துவுக்கு பணிந்து ஒரே உடலாய் வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். கிறிஸ்துவின் வார்த்தையி னாலும் திருமுழுக்கு நீரினாலும் கழுவப்பட்டுள்ள நாம் அனைவரும், கடவுள் முன்னி லையில் மாசற்ற, தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவால் பேணி வளர்க்கப்படும் உடலின் உறுப்புகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வின் ஊற்றாம் இறைவா, 
   உம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையால் நாளும் வளர்ந்து வருகின்ற உமது திருச்சபை யினை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரையும், உம் மீதான நம்பிக்கையில் உறுதிபடுத்திக் காத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உண்மையின் உறைவிடமாம் இறைவா,
  உலகிற்கு நிலைவாழ்வு அளிக்கும் உமது திருமகனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, உலகெங்கும் உமது நற்செய்தியைப் பறைசாற்றும் தூதுவர் களாக விளங்கும் வல்லமையை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நன்மைகளின் நாயகராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை கடவுளாகிய உமது மேன்மையை உணரவும், பொய்மையின் இருளிலிருந்து விலகி உண்மையின் ஒளியாகிய உம்மைத் தேடி வரவும் தேவையான அருளுதவிகளை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலை தருபவராம் இறைவா,
   தீராத நோய்கள், கடன் தொல்லைகள், மன வேதனைகள், பிரச்சனைகள் போன்றவற் றில் சிக்கித் தவிப்போர் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உம் இரக்கத்தால் அவற்றில் இருந்து விடுதலை பெற்று, வாழ்கின்ற உண்மை கடவுள்
நீரே என்பதை அறிக்கையிடவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நிலைவாழ்வு அளிப்பவராம் இறைவா,
   உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வு தரும் வார்த் தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய், மாசற்ற, தூய வாழ்வு வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, August 17, 2012

ஆகஸ்ட் 19, 2012

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

முதல் வாசகம்: நீதிமொழிகள் 9:1-6
   ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, "அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங் கள்'' என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; "வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங் கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்'' என்றது.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5:15-20
   சகோதர சகோதரிகளே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள். திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப் பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்ட வரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற் றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:51-58
   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ் வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்றார். நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம் கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவரு டைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப் போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண் போரும் என்னால் வாழ்வர். விண்ணகத் திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார் கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, August 15, 2012

ஆகஸ்ட் 19, 2012

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஞானத்துக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவின் திருவுடலையும், திரு இரத்தத்தையும் உண்டு நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக் கிறது. உலக பொருட்களில் பற்றுள்ளவர்களாய் வாழாமல், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஞானமுடையவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவு ளுக்கு உண்மை உள்ளவர்களாய் திகழ்ந்து, கடவுள் தருபவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ இயேசு நம்மை அழைக்கிறார். நாம் வாழ்வு பெறுவதற்காக, அவர் தன்னையே நமக்கு உணவாக தருகிறார். விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உண வாகிய இயேசுவின் சதையாலும், இரத்தத்தாலும் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரி மையாக்கிக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஞானத்துக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஞானத்தைப் பற்றி பேசுகிறது. ஞானம் தயார் செய்து அளிக்கும் இன்சுவை விருந்தில் பங்கேற்க அறியாப்பிள்ளைகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. ஞானம் தரும் விருந்தில் கலந்துகொண்டு கடவுளுக்கு உரியவர்களாய் வாழ நாம் அழைக்கப்படு கிறோம். ஞானத்தின் வழியாக நேரிய வழியில் பயணித்து வாழ்வைக் கண்டடையும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஞானத்துக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமது நடத்தையைப் பற்றி கருத் தாய் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். இவ்வுலகின் தீயப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதவாறு, ஞானத்தோடு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். நமது சொல்லும், செயலும் ஆண்டவரின் மாட்சியை பறைசாற்றும் வகையில் அமைய வேண்டுமென்று பவுல் எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்துவின் பெயரால் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் ஊற்றே இறைவா, 
   உமது திருமகனின் சதையாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெறும் திருச்சபையின் மக்கள் அனைவரையும், ஞானத்தோடும் விவேகத்தோடும் வழிநடத்தும் வலிமையை எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் தொடக்கமே இறைவா,
  உலகிற்கு வாழ்வளிப்பதற்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த இயேசுவில் இந்த உலகம் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் நிலை வாழ்வை மக்கள் அனைவரும் பெற்று மகிழவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் பிறப்பிடமே இறைவா,
   எங்கள் நாட்டு மக்களும், தலைவர்களும் உமது அன்பின் அரசை விரும்பித் தேடவும், அதன் மூலம் நீர் வழங்கும் அருள்வாழ்வைப் பெற்று நீதியிலும் அன்பிலும் உண்மை நெறியிலும் வளர்ச்சி காணவும்
துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணமளிக்கும் மருத்துவரே இறைவா,
   உலகெங்கும் புரிந்துகொள்தல், ஏற்றுக்கொள்தல், விட்டுக்கொடுத்தல், அன்புசெய்தல், அரவணைத்தல், பரிவுகாட்டுதல், நீதியை நிலைநாட்டுதல், பிறரை மதித்தல், உண்மைத் தேடுதல், அமைதி ஏற்படுத்துதல் போன்ற நன்மைகளுக்கு எதிரான நோய்களால் பாதிக் கப்பட்டுள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மைகளின் நாயகரே இறைவா,
  நிலைவாழ்வின் உணவாகிய உம் திருமகன் இயேசுவை உட்கொள்ளும் எம் பங்குத் தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமக்குகந்த நேரிய வழியில் ஞானத்தோடு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, August 10, 2012

ஆகஸ்ட் 12, 2012

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 19:4-8
   அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வரு மாறு மன்றாடினார்: "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள் ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல." பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு" என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார். ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்" என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவி னால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 4:30-5:2
   சகோதர சகோதரிகளே, கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங் களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னி யுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:41-51
   அக்காலத்தில் "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறி யதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படி யிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படிச் சொல்லலாம்?" என்று பேசிக் கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னி டம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள் ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள் ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவு ளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலி ருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, August 8, 2012

ஆகஸ்ட் 12, 2012

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நிலைவாழ்வுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவில் நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. 'விண்ணகத்தி லிருந்து இறங்கி வந்த உணவு நானே' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதி ராக முணுமுணுத்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் இயேசு, தன்னில் நம்பிக்கை கொள் வோருக்கு நிலைவாழ்வை வாக்களிக்கிறார். உலகு வாழ்வதற்காக இயேசு தன்னையே கையளிக்கிறார். இயேசு விண்ணகத் தந்தையிடம் இருந்து வந்தவர் என்ற நம்பிக்கையால் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நிலைவாழ்வுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், எலியாவின் பாலைநில அனுபவத்தைப் பற்றி  எடுத்துரைக் கிறது. தனக்கு நேர்ந்த துன்பங்களால் துவண்ட எலியா, தன் உயிரை எடுத்துக் கொள்ளு மாறு ஆண்டவரிடம் மன்றாடுகிறார். ஆண்டவரோ வானதூதர் வழியாக அவருக்கு அப்ப மும் தண்ணீரும் அனுப்புகிறார். அந்த உணவால் வலிமை பெற்ற எலியா, நாற்பது நாட் கள் பாலைநிலத்தில் நடந்து கடவுளின் மலையை அடைந்தார் என்பதைக் காண்கிறோம். எலியாவைப் போல கடவுள் தரும் உணவால் வலிமை பெற வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நிலைவாழ்வுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச் சல், பழிச்சொல் போன்ற தீமைகள் அனைத்தையும் நம்மை விட்டு நீக்குமாறு அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து வழியாக தந்தையாம் கடவுள் நம்மை மன்னித்தது போன்று, நாமும் ஒருவரை ஒருவர் மன்னித்து அன்புசெய்து வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வின் பலியால் தூயோராக்கப்பட்டிருக்கும் நாம், கடவுளின் அன்பு பிள்ளைகளாய் மாறும்  வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிலைவாழ்வு தருபவராம் இறைவா, 
   விண்ணக உணவாகிய கிறிஸ்துவால் வலிமை பெற்று, உமது மந்தையை அருள் வாழ்வில் வழிநடத்தும் ஆற்றலை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. பரிவுள்ளவராம் இறைவா,
  உலகிற்கு வாழ்வளிக்கும் உணவாக நீர் அனுப்பிய உமது திருமகன் இயேசுவை உலக மக்கள் அனைவரும் சுவைத்து மகிழுமாறு, திறந்த மனதோடு உண்மையத் தேடும் எண் ணத்தை மானிடர் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் அரசராம் இறைவா,
   எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல், அன்புசெய்தல் ஆகிய மதிப்பீடுகளில் வளரவும், உண்மைக் கடவுளாகிய உம்மைத் தேடி அறிந்துகொள்ளவும் உதவ
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
   உலகெங்கும் அரசியல், சமூக, சமய சூழ்நிலைகளில் சிக்குண்டு, உம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துணர முடியாத வகையில் வாழும் மக்கள் அனைவருக்கும், உம் மில் நம்பிக்கை கொள்ளும் சூழ்நிலையை அமைத்து கொடுக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் ஊற்றாம் இறைவா,
   எங்களுக்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உணவாகிய இயேசுவில் முழு மையான நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வின் பேறுபலன்களைப் பெற்று மகிழும் வரத் தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, August 3, 2012

ஆகஸ்ட் 5, 2012

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப்பயணம் 16:2-4,12-15
   அந்நாள்களில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் சீன் பாலை நிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, "இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலை நிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்'' என்றனர். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதோ பார்! நான் உங்களுக்காக வானத்தி லிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன். இஸ்ரயேல் மக்களின் முறையீடு களை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், 'மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்' என்று சொல்'' என்றார். மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின் மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப் பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி 'மன்னா' என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே'' என்றார்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 4:17,20-24
   சகோதர சகோதரிகளே, நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தவர் வாழ்வதுபோல இனி நீங்கள் வாழக் கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண் ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இது வல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரி டமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:24-35
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்ற னர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்ட தால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட் டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக் கேற்ற செயல்'' என்றார். அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன் னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! 'அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!'' என்றனர். இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது'' என்றார். அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்'' என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்ப வருக்கு என்றுமே தாகம் இராது'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, August 1, 2012

ஆகஸ்ட் 5, 2012

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நிலைவாழ்வுக்கான உணவைத் தேட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு செய்த அற்புதத்தால் அப்பங்களை வயிறார உண்ட மக்கள், மீண்டும் உணவைத் தேடி இயேசுவிடம் செல்கின்றனர். இயேசு அவர்க ளிடம், தானே வாழ்வு தரும் உணவு என்று எடுத்துரைக்கிறார். மனித உடல் எடுத்த இறைமகன் இயேசு, நற்கருணை வடிவில் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார். நமது ஆன்மத் தேவைகளுக்காக நிலைவாழ்வு அளிக்கும் உணவாம் இயேசுவைத் தேடும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட இஸ்ரேல் மக்கள், நல்ல உணவுக்காக முணுமுணுத்ததை எடுத்துரைக்கிறது. மக்களின் பிதற்ற லைக் கேட்ட ஆண்டவர், பாலை நிலத்தில் அவர்களுக்கு மன்னாவும் காடையும் உண வாக கிடைக்கச் செய்கிறார். மனிதர் உயிர் வாழ உணவு அளிப்பவர் கடவுளே என்ற கருத்து இங்கு தெளிவுபடுத்தப்படுவதை காண்கிறோம். நாமும் ஆண்டவர் தரும் உண வில் நிறைவு கண்டு மகிழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமது தீய நடத்தையில் இருந்து விலகி வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றி, உண்மையிலும் நன்மையிலும் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவை உணவாகப் பெறும் நாம் அந்த உணவால் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்வோம். கிறிஸ்து வின் இயல்பை அணிந்தவர்களாய் நீதியிலும் தூய்மையிலும் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வு தருபவராம் இறைவா, 
   உமது அருள் நலன்களால் ஊட்டம் பெற்று, திருச்சபை செழித்தோங்க உழைக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறைமக்களின் ஆன்மத் தேவைகளை நிறைவேற்றுபவர்களாய் செயல்பட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. இரக்கமுள்ளவராம் இறைவா,
  எங்கள் நாட்டு மக்களை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரும் மக்களின் பொருளாதார வசதிகள் மேம்பட உழைக்கவும், அடக்குமுறை, பசி, நோய் ஆகி யவற்றால் துன்புறும் மக்களின் துயர் துடைப்பவர்களாய் திகழவும், மனம் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நீதியின் அரசராம் இறைவா,
  
உலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், உள்நாட்டு கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் உமது உதவியை நாடவும், தீமையை வெறுத்து, நன்மையையும் நீதியையும் தேடி நல்வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அற்புதம் புரிபவராம் இறைவா,
   உலக அரசியல் சூழ்நிலைகளால் அடிமைத்தனத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் அனை வரும் உமது உதவியை நாடவும், நீர் அளிக்கும் விடுதலையால் அவர்கள் மனித மாண் போடு வாழவும் உதவ 
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நிலைவாழ்வு அளிப்பவராம் இறைவா,
  
நற்கருணை வழியாக உமது திருமகனை உணவாக உட்கொள்ளும் எங்கள் பங்குத் தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நீர் விரும்பும் உண்மை, தூய்மை ஆகியவற்றின் நெறியில் நடந்து, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.