பொதுக்காலம் 21-ம் ஞாயிறு
முதல் வாசகம்: யோசுவா 24:1-2,15-17,18
அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று
கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும்
அதி காரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: "ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது
என்று உங்கள் பார் வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால்
பணிந்து வந்த தெய்வங் களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின்
தெய்வங்களுக்கோ இவர் களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே
இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே
ஊழியம் செய்வோம்.'' மக்கள் மறு மொழியாக, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது
எங்களி டத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர்
எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து
வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார்.
நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும்
எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில்
அவரே எங்கள் கடவுள்'' என்றனர்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5:21-32
சகோதர
சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே,
ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.
ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல கணவர்
மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின்
மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள்
கணவ ருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச் சபை மீது அன்பு செலுத்தியது போல
நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத் துங்கள். ஏனெனில் கிறிஸ்து
திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார்.
அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லா மல் தூய்மையும்
மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே
கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம் மீதே அன்பு
கொள்கிற வர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி
வளர்க்கிறார்.
அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில்
நாம் அவரது உடலின் உறுப்புகள். "இதனால் கணவர் தம் தாய் தந்தையை
விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய்
இருப்பர்'' என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது
திருச்சபைக்கும் கிறிஸ்து வுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.
நற்செய்தி வாசகம்: யோவான் 6:60-69