Wednesday, August 8, 2012

ஆகஸ்ட் 12, 2012

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நிலைவாழ்வுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவில் நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. 'விண்ணகத்தி லிருந்து இறங்கி வந்த உணவு நானே' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதி ராக முணுமுணுத்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் இயேசு, தன்னில் நம்பிக்கை கொள் வோருக்கு நிலைவாழ்வை வாக்களிக்கிறார். உலகு வாழ்வதற்காக இயேசு தன்னையே கையளிக்கிறார். இயேசு விண்ணகத் தந்தையிடம் இருந்து வந்தவர் என்ற நம்பிக்கையால் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நிலைவாழ்வுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், எலியாவின் பாலைநில அனுபவத்தைப் பற்றி  எடுத்துரைக் கிறது. தனக்கு நேர்ந்த துன்பங்களால் துவண்ட எலியா, தன் உயிரை எடுத்துக் கொள்ளு மாறு ஆண்டவரிடம் மன்றாடுகிறார். ஆண்டவரோ வானதூதர் வழியாக அவருக்கு அப்ப மும் தண்ணீரும் அனுப்புகிறார். அந்த உணவால் வலிமை பெற்ற எலியா, நாற்பது நாட் கள் பாலைநிலத்தில் நடந்து கடவுளின் மலையை அடைந்தார் என்பதைக் காண்கிறோம். எலியாவைப் போல கடவுள் தரும் உணவால் வலிமை பெற வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நிலைவாழ்வுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச் சல், பழிச்சொல் போன்ற தீமைகள் அனைத்தையும் நம்மை விட்டு நீக்குமாறு அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து வழியாக தந்தையாம் கடவுள் நம்மை மன்னித்தது போன்று, நாமும் ஒருவரை ஒருவர் மன்னித்து அன்புசெய்து வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வின் பலியால் தூயோராக்கப்பட்டிருக்கும் நாம், கடவுளின் அன்பு பிள்ளைகளாய் மாறும்  வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிலைவாழ்வு தருபவராம் இறைவா, 
   விண்ணக உணவாகிய கிறிஸ்துவால் வலிமை பெற்று, உமது மந்தையை அருள் வாழ்வில் வழிநடத்தும் ஆற்றலை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. பரிவுள்ளவராம் இறைவா,
  உலகிற்கு வாழ்வளிக்கும் உணவாக நீர் அனுப்பிய உமது திருமகன் இயேசுவை உலக மக்கள் அனைவரும் சுவைத்து மகிழுமாறு, திறந்த மனதோடு உண்மையத் தேடும் எண் ணத்தை மானிடர் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் அரசராம் இறைவா,
   எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல், அன்புசெய்தல் ஆகிய மதிப்பீடுகளில் வளரவும், உண்மைக் கடவுளாகிய உம்மைத் தேடி அறிந்துகொள்ளவும் உதவ
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
   உலகெங்கும் அரசியல், சமூக, சமய சூழ்நிலைகளில் சிக்குண்டு, உம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துணர முடியாத வகையில் வாழும் மக்கள் அனைவருக்கும், உம் மில் நம்பிக்கை கொள்ளும் சூழ்நிலையை அமைத்து கொடுக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் ஊற்றாம் இறைவா,
   எங்களுக்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உணவாகிய இயேசுவில் முழு மையான நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வின் பேறுபலன்களைப் பெற்று மகிழும் வரத் தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.