பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
முதல் வாசகம்: 1 அரசர்கள் 19:4-8
அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார்.
அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப்
பின்வரு மாறு மன்றாடினார்: "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை
எடுத்துக்கொள் ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல."
பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு" என்றார்.
அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு
குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு
பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார். ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்" என்றார்.
அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவி னால் வலிமை அடைந்த அவர்,
நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை
அடைந்தார்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 4:30-5:2
சகோதர
சகோதரிகளே, கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை
முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். மனக்
கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை
அனைத்தையும் உங் களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து
வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னி யுங்கள். ஆகவே நீங்கள்
கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக
கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு
கொண்டு வாழுங்கள்.
நற்செய்தி வாசகம்: யோவான் 6:41-51