பொதுக்காலம் 21-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்தொன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நிலைவாழ்வு தரும் இயேசு வின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, உண்மை கடவுளுக்கு பணிந்து வாழவும், பணிவிடை செய்யவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வாழாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி கடவுளின் மாட்சியை வெளிப்படுத்து பவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், அவரோடு ஒன்றித்த வாழ்வு வாழ்ந்து நிலைவாழ் வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பேதுருவைப் போல ஆண்டவர் இயேசுவின் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்க ளாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம், யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கடவுளைப் பற்றி கேள்வி கேட்டதையும், அதற்கு அவர்கள் அளித்த பதிலையும் பற்றி பேசுகிறது. இஸ்ரயேல் மக் கள் உண்மை கடவுளை விடுத்து, வேற்றின தெய்வங்களை வழிபட விரும்புகிறார்களா என்பதற்கு பதிலளிக்குமாறு யோசுவா கேட்கிறார். கடவுளாகிய ஆண்டவரின் மாபெரும் செயல்களை விடுதலைப் பயணத்தில் கண்ட மக்கள், அவரை விடுத்து வேற்று தெய்வங் களை நாடப் போவதில்லை என்று பதிலளிக்கிறார்கள். நாம் வழிபடும் உண்மை கடவு ளிடம் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல ஒருவர் மற்றவருக்கு பணிந்து வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து திருச்சபை யின் தலையாய் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், கிறிஸ்துவுக்கு பணிந்து ஒரே உடலாய் வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். கிறிஸ்துவின் வார்த்தையி னாலும் திருமுழுக்கு நீரினாலும் கழுவப்பட்டுள்ள நாம் அனைவரும், கடவுள் முன்னி லையில் மாசற்ற, தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவால் பேணி வளர்க்கப்படும் உடலின் உறுப்புகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல ஒருவர் மற்றவருக்கு பணிந்து வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து திருச்சபை யின் தலையாய் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், கிறிஸ்துவுக்கு பணிந்து ஒரே உடலாய் வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். கிறிஸ்துவின் வார்த்தையி னாலும் திருமுழுக்கு நீரினாலும் கழுவப்பட்டுள்ள நாம் அனைவரும், கடவுள் முன்னி லையில் மாசற்ற, தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவால் பேணி வளர்க்கப்படும் உடலின் உறுப்புகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
1. வாழ்வின் ஊற்றாம் இறைவா,
உம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையால் நாளும் வளர்ந்து வருகின்ற உமது திருச்சபை யினை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரையும், உம் மீதான நம்பிக்கையில் உறுதிபடுத்திக் காத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உண்மையின் உறைவிடமாம் இறைவா,
உலகிற்கு நிலைவாழ்வு அளிக்கும் உமது திருமகனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, உலகெங்கும் உமது நற்செய்தியைப் பறைசாற்றும் தூதுவர் களாக விளங்கும் வல்லமையை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நன்மைகளின் நாயகராம் இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை கடவுளாகிய உமது மேன்மையை உணரவும், பொய்மையின் இருளிலிருந்து விலகி உண்மையின் ஒளியாகிய உம்மைத் தேடி வரவும் தேவையான அருளுதவிகளை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலை தருபவராம் இறைவா,
தீராத நோய்கள், கடன் தொல்லைகள், மன வேதனைகள், பிரச்சனைகள் போன்றவற் றில் சிக்கித் தவிப்போர் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உம் இரக்கத்தால் அவற்றில் இருந்து விடுதலை பெற்று, வாழ்கின்ற உண்மை கடவுள் நீரே என்பதை அறிக்கையிடவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நிலைவாழ்வு அளிப்பவராம் இறைவா,
உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வு தரும் வார்த் தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய், மாசற்ற, தூய வாழ்வு வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.