பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
முதல் வாசகம்: நீதிமொழிகள் 9:1-6
ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச்
செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை
இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன்
தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, "அறியாப்
பிள்ளைகளே, இங்கே வாருங் கள்'' என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு
அழைப்பு விடுத்தது; "வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து
வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங் கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்;
அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்'' என்றது.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5:15-20
சகோதர
சகோதரிகளே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய்
வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை
முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய
திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள். திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான
வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள்
உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப் பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை
இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்ட வரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற் றிற்காகவும் எப்போதும் தந்தையாம்
கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
நற்செய்தி வாசகம்: யோவான் 6:51-58