பொதுக்காலம் 18-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரை யும் அன்புடன்
அழைக்கிறோம். இன்றைய
திருவழிபாடு நிலைவாழ்வுக்கான உணவைத் தேட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு செய்த அற்புதத்தால் அப்பங்களை வயிறார உண்ட மக்கள், மீண்டும் உணவைத் தேடி இயேசுவிடம் செல்கின்றனர். இயேசு அவர்க ளிடம், தானே வாழ்வு தரும் உணவு என்று எடுத்துரைக்கிறார். மனித உடல் எடுத்த இறைமகன் இயேசு, நற்கருணை வடிவில் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார். நமது ஆன்மத் தேவைகளுக்காக நிலைவாழ்வு அளிக்கும் உணவாம் இயேசுவைத் தேடும் வரம்
வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட இஸ்ரேல் மக்கள், நல்ல உணவுக்காக முணுமுணுத்ததை எடுத்துரைக்கிறது. மக்களின் பிதற்ற லைக் கேட்ட ஆண்டவர், பாலை நிலத்தில் அவர்களுக்கு மன்னாவும் காடையும் உண வாக கிடைக்கச் செய்கிறார். மனிதர் உயிர் வாழ உணவு அளிப்பவர் கடவுளே என்ற கருத்து இங்கு
தெளிவுபடுத்தப்படுவதை காண்கிறோம். நாமும் ஆண்டவர் தரும் உண வில் நிறைவு கண்டு மகிழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமது தீய நடத்தையில் இருந்து விலகி வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றி, உண்மையிலும் நன்மையிலும் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவை உணவாகப் பெறும் நாம் அந்த உணவால் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்வோம். கிறிஸ்து வின் இயல்பை அணிந்தவர்களாய் நீதியிலும் தூய்மையிலும் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு: இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமது தீய நடத்தையில் இருந்து விலகி வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றி, உண்மையிலும் நன்மையிலும் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவை உணவாகப் பெறும் நாம் அந்த உணவால் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்வோம். கிறிஸ்து வின் இயல்பை அணிந்தவர்களாய் நீதியிலும் தூய்மையிலும் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
1. வாழ்வு தருபவராம் இறைவா,
உமது அருள் நலன்களால் ஊட்டம் பெற்று, திருச்சபை செழித்தோங்க உழைக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறைமக்களின் ஆன்மத் தேவைகளை நிறைவேற்றுபவர்களாய் செயல்பட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. இரக்கமுள்ளவராம் இறைவா,
எங்கள் நாட்டு மக்களை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரும் மக்களின் பொருளாதார வசதிகள் மேம்பட உழைக்கவும், அடக்குமுறை, பசி, நோய் ஆகி யவற்றால் துன்புறும் மக்களின் துயர் துடைப்பவர்களாய் திகழவும், மனம் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் அரசராம் இறைவா,
உலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், உள்நாட்டு கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் உமது உதவியை நாடவும், தீமையை வெறுத்து, நன்மையையும் நீதியையும் தேடி நல்ல வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அற்புதம் புரிபவராம் இறைவா,
உலக அரசியல் சூழ்நிலைகளால் அடிமைத்தனத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் அனை வரும் உமது உதவியை நாடவும், நீர் அளிக்கும் விடுதலையால் அவர்கள் மனித மாண் போடு வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நிலைவாழ்வு அளிப்பவராம் இறைவா,
நற்கருணை வழியாக உமது திருமகனை உணவாக உட்கொள்ளும் எங்கள் பங்குத் தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நீர் விரும்பும் உண்மை, தூய்மை ஆகியவற்றின் நெறியில் நடந்து, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.